ஸ்டாலின் திமுக அரசு பாதுகாக்க வேண்டிய குடிமகனை பலி கொடுத்து கொலை செய்திருக்கிறது. இந்த அரசுதான் பொறுப்பு நீதியரசர்கள் சொல்லி இருக்கிறார்கள்*
காட்டுத்தர்பார் ஆட்சி நடக்கிறது கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் இன்றைக்கு ஒரு இளைஞரை படுகொலை செய்து இருக்கிறார்கள். முதல் குற்றவாளியாக மு க ஸ்டாலின் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா எங்கும் நீதி கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

காவல்துறையில் லாக்கப் டெக் என்று சொல்லக்கூடிய லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற முதலமைச்சர் பாதுகாக்க வேண்டாமா? பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய முதலமைச்சரை சாரி என்று சொல்கிறார் என்ன நியாயம் உயிரைப் பறித்து விட்டு சாரி என்று சொன்னால் உயிர் திரும்பி வந்துவிடுமா மக்களை சிந்திக்க வேண்டிய நேரம் மன்னர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி மக்களாட்சி மீண்டும் வரவேண்டும்.
இன்னொரு முறை திமுக விபத்தில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் அவர்களை தட்டிக் கேட்கிற அதிகாரம் நம்மிடத்தில் போய்விடும் தட்டிக் கேட்க முடியாது ஆணவத்தின் உச்சியில் அதிகாரத்தின் உச்சியில் கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டை கபலிகரம் செய்து விடும்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு,
கழக நிரந்தர பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் 100 நாட்களில் 100 திருக்கோயிலில் 100 நாட்கள் சிறப்பு பிரார்த்தனையோடு கிராம அன்னதான திருவிழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போத்தநதி கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் கிராம அன்னதானத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கி துவக்கி வைத்தார்.
கழக நிரந்தர பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் இன்று திருமங்கலம் தொகுதி போத்தநதி கிராமத்தில் மாபெரும் கிராம அன்னதான விழா நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார். கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபுசங்கர் செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட அன்னதான திருவிழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறுசுவை அன்னதானத்தை துவக்கி வைத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிவரக்கோட்டை ஆதிராஜா மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல் மாவட்ட அவை தலைவர் முருகன் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சரவண பாண்டியன் உசாசுந்தரம் சிவசக்தி கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணன் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் நிர்வாகிகள் சுகுமார் உச்சப்பட்டி செல்வம் கண்ணபிரான் ரமேஷ் விஜி அஜித் திருப்பதி அனிதா பால்ராஜ் உள்பட மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 நாள் கோவில்களில் சிறப்பு பூஜை முன்னிட்டு போத்தநதி அருள்மிகு விநாயகர் திருக்கோவிலில் மலர் தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கழக நிர்வாகிகளுக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து போத்தநதி புதுப்பட்டி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு பொன்னாடை அணிவித்து விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்.
அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து வழங்கி சிறப்புரையாற்றிதாவது,
அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்மை காப்பாற்ற வேண்டிய காவல்துறை அவர் கையில் உள்ளது நீதியரசர்கள் என்ன சொல்கிறார்கள். தன் பிள்ளையை தன் குடிமகனை காக்க வேண்டிய அரசே கொலை செய்திருக்கிறது சொல்வது உதயகுமார் அல்ல மாண்புமிகு நீதி அரசர்கள் நீதிமன்றத்தில் மதுரை உயர்மன்ற கிளையில் நீதியரசர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஸ்டாலின் திமுக அரசு பாதுகாக்க வேண்டிய குடிமகனை பலி கொடுத்து கொலை செய்திருக்கிறது இந்த அரசுதான் பொறுப்பு நீதி அரசர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
காட்டு தர்பார் ஆட்சி தமிழகத்தில் இதுவரை பார்த்ததில்லை நாங்கள் பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துள்ளோம் காட்டு தர்பார் ஆட்சி நடக்கிறது. கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற ஆணவத்தில் இன்றைக்கு ஒரு இளைஞரை படுகொலை செய்து இருக்கிறார்கள் கொலை செய்திருக்கிறார்கள். முதல் குற்றவாளியாக மு க ஸ்டாலின் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா எங்கும் நீதி கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்தது இங்கே நடப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
25 பேர்கள் விசாரணைக்கு சென்றவர்கள் காவல்துறையில் லாக்கப் டெத் என்று சொல்லக்கூடிய லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது நான் கேட்கிறேன் மு க ஸ்டாலின் அவர்களே 24 பேரில் என்ன நியாயத்தை நீதியை நிலைநாட்டி நிவாரணத்தை வழங்கி இருக்கிறீர்கள் இப்போது மட்டும் 25வது நபராக உயிர் போயிருக்கிறது 50 லட்சம் தருகிறோம் வேலை தருகிறோம் பட்டா தருகிறோம் எதை வேண்டுமானாலும் கொடுங்கள் தமிழக மக்கள் கேட்பது நேற்று வரைக்கும் நம்முடன் இருந்த அஜித்குமார் திரும்பி தர முடியுமா? தமிழ்நாட்டு மக்களின் கேள்வி,
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிற முதலமைச்சர் பாதுகாக்க வேண்டாமா பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய முதலமைச்சரே சாரி என்று சொல்கிறார் என்ன நியாயம் உயிரை பறித்து விட்டு சாரி என்று சொன்னால் உயிர் திரும்பி வந்துவிடுமா மக்களே சிந்திக்க வேண்டிய நேரம் உங்கள் பிள்ளை முதலமைச்சராக வேண்டும் அமைச்சராக வேண்டும் விளையாட்டு துறைக்கு யார் பெற்ற பிள்ளையோ உயிர் பறிபோயிருக்கிறது. சாரிமா நடந்தது நடந்ததாக இருக்க வேண்டும் என்று மனசாட்சி இல்லாமல் உணர்வு இல்லாமல் முதலமைச்சர் இதுவரை பார்த்ததில்லை
மன்னர் ஆட்சிக்கு முடிவுரை எழுதி மக்களாட்சி மீண்டும் வர வேண்டும் திருமங்கலம் தொகுதியில் இரட்டை இலை மலர வேண்டும்.
இன்னொரு முறை திமுக விபத்தில் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் அவர்களை தட்டிக் கேட்கிற அதிகாரம் நம்மிடத்தில் போய்விடும் தட்டிக் கேட்க முடியாது. ஆணவத்தின் உச்சியில் அதிகாரத்தின் உச்சியில் கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டை கபலி கரம் செய்துவிடும் மன்னராட்சிக்கு மகுடம் சூட்டப்படும் மக்களாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என சிறப்பு உரையாற்றினார்.