சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளராக 2022ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருண் பிரசாத், கடந்த மூன்று ஆண்டுகளில் விவசாயிகளுடன் நெருக்கமான உறவை வளர்த்ததுடன், நெல் கொள்முதல் மையங்களை பல்வேறு இடங்களில் அமைத்து விவசாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

தற்போது அவர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்ற நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரிவு உபச்சார விழா சிவகங்கை நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தேவகோட்டை, மானாமதுரை, காரைக்குடி, காளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, மலர் மாலை, சால்வை அணிவித்து நெகிழ்ச்சியுடன் வழியனுப்பினர்.
அரசுத் துறையில் மனிதநேயம் அடிப்படையிலான சேவையை நினைவூட்டும் இந்த நிகழ்வு, உள்ளூர் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.