• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பொல்லாத உலகம் பாடல்நிகழ்த்திய சாதனை?

மாறன் படத்தில் இடம்பெறும் பொல்லாத உலகம் என்கிற பாடலின் வீடியோவை ஜனவரி 26 அன்று படக்குழு வெளியிட்டது. தனுஷ் மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியிருந்த இப்பாடல் வெளியானது முதல் யூடியூப்பில் வைரல் ஆனது.
நடிகர்தனுஷ் நடிப்பில் தயாராகி உ இருக்கும் படம் மாறன்.

துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படத்திற்கு G.V.பிரகாஷ்குமார்இசையமைத்துள்ளார்தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக மாறன் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.

இப்படத்தில் இடம்பெறும் பொல்லாத உலகம் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டது பாடல் வெளியானது முதல் யூடியூப்பில்வைரல் ஆனது. இப்பாடலில் தனுஷின் நடனமும் வித்தியாசமாக இருந்ததால் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது.

இந்நிலையில், பொல்லாத உலகம் பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி ஒரே நாளில் 7.8 மில்லியன் பார்வைகளை பெற்று, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப்பில் அதிக பார்வைகளை பெற்ற தமிழ் வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் மாரி 2 படத்தில் இடம்பெற்றரவுடி பேபி பாடல் 7 மில்லியன் பார்வைகளுடன் முதலிடத்தில் இருந்தது.

3 வருஷமாக முறியடிக்கப்படாமல் இருந்த இந்த சாதனையை பொல்லாத உலகம் பாடல் தற்போது முறியடித்துள்ளது.