• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பழங்கால பொருட்கள் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்ட பொதுமக்கள்..,

ByK Kaliraj

Mar 5, 2026

கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் பண்டைய காலத்தில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய குவளை, திருமண வீடியோ கேசட், மினி டிவி, வானொலிபெட்டி, அஞ்சறைப்பெட்டி, ரெக்கார்டு பிளேயர், நெல்லை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்திய குடுவை ,வெற்றிலை பெட்டி, அரிக்கேன் விளக்கு, பெண்கள் விளையாட பயன்படுத்திய பல்லாங்குழி, ஆடியோ கேசட், தானியங்களை அரைக்க பயன்படுத்திய திருக்கை ,பதிவு செய்யப்பட்ட கேசட், கூஜா, ஓலைச்சுவடி, திருமாங்கல்யத்தை வைப்பதற்கான பெட்டி, நெல் அளக்கும் பெட்டி, டெலிபோன், உலக்கை, தராசு, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

வைக்கப்பட்ட பொருட்கள் குறித்து2 பயன்படுத்தப்பட்ட விதம் குறித்தும் பள்ளி மாணவ மாணவிகள் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள் இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்று பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள், பழங்காலத்தில் பயன்படுத்திய நகைகள், புடவைகள், அணிந்து வந்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.