• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நகையை உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள் கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு

ByN.Ravi

May 16, 2024

மதுரை, சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ். ஆர். சரவணன். இவர், சோழவந்தானில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று மாலை தனது கடையிலிருந்து வீட்டிற்கு கிளம்பி செல்லும்போது, சாலையில் நூல் கட்டிய நிலையில் நகை கவர் ஒன்று கிடந்துள்ளது. இதை எடுத்துப் பார்த்தவர், அப்போதுதான் வங்கியில் இருந்து நகையை திருப்பிச் சென்றபோது கீழே தவற விட்டு சென்றுள்ளனர் என தெரிந்து. எதிரில் இருந்த மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரிடம் காண்பித்துள்ளார். நகை கவரை பார்த்த வங்கி மேலாளர் இது தங்களது வங்கியின் கவர் இல்லை என்று தெரிவித்து அருகில் உள்ள வங்கியில் சென்று விசாரிக்குமாறு கூறி அனுப்பி உள்ளார்.
உடனே அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சென்று வங்கி மேலாளிடம் காண்பித்து இருக்கிறார் . உடனே, கவரை பார்த்த வங்கி மேலாளர் இது தங்களது வங்கியின் கவர் என்றும் சிறிது நேரத்திற்கு முன்புதான் இந்த நகையை திருப்பிச் சென்றனர் என்றும், கூறியுள்ளார். மேலும், அதில் இரண்டு மோதிரம் இரண்டு செயின் சேர்த்து நாலே முக்கால் பவன் உள்ளது தெரிந்தது. உடனே, வங்கி மேலாளர் தனது வங்கியில் உள்ள முகவரி மூலம் நகையை திருப்பிச்சென்ற பெண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சரவணன், நகை காணாமல் போனதாக யாராவது வந்தால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்குமாறும், தன்னிடம் கீழே கிடந்த நகை ஒன்று கவருடன் உள்ளதாகவும், தெரிவித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு நகையை பறிகொடுத்த சோழவந்தான் முதலியார் கோட்டை தெருவை சேர்ந்த வசந்தி என்பவர் தனது நாலே முக்கால் பவுன் நகை வங்கியிலிருந்து திருப்பி வீட்டிற்கு சென்றபோது கீழே தவற விட்டுள்ளதாகவும், இது குறித்து தகவல் கிடைத்தால் தனக்கு தெரிவிக்குமாறும் கூறி சென்றுள்ளது தெரிந்தது. அதனை அடுத்து காவலர்கள் நகையை தவறவிட்ட பெண்ணை வரவழைத்து நகையை ஒப்படைத்தனர் . கீழே கிடந்த நகையை எடுத்து நேர்மையுடன் வங்கி அதிகாரி மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த முன்னாள் கவுன்சிலர் எஸ் ஆர் சரவணனை பொதுமக்கள் மற்றும் வங்கி மேலாளர் காவலர்கள் பாராட்டினர். மேலும், நகையை ஒப்படைத்ததற்காக அன்பளிப்புகள் வழங்க முற்பட்டபோது, அதனை நேர்மையுடன் மறுத்து நகையை பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு பெண்ணிடம் கூறிச் சென்றார். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எஸ். ஆர். சரவணனின் இந்த செயல் பொதுமக்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.