• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

50 அடி கிணற்றிக்குள் விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்…

BySeenu

Nov 5, 2023

கோவை ஆலாந்துறை அடுத்த செம்மேடு இளங்கோ வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து சுரேஷ்குமார் தொண்டாமுத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் டார்ச் விளக்குகளுடன் உள்ளே இறங்கி உள்ளே போராடிக் கொண்டிருந்த நாயை பத்திரமாக உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து மீட்கப்பட்ட நாய் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இரவு நேரத்தில் கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் கைதட்டி பாராட்டினார்.