தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த சூழலில்,

இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்து மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டியபட்டி நக்கலப்பட்டி, வெள்ளைமலைபட்டி, சீமானூத்து, தி.விலக்கு, கணவாய்ப்பட்டி பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை செய்தது .
இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலை வருவதால் ஒட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர்., இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.