• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இரவிலும் தொடரும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்..,

ByR.Arunprasanth

Apr 23, 2025

தங்கள் ஊருக்கு செல்லாமல் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி சமூதாய கூடத்தில் இருந்து வருகின்றனர்

சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று முடிச்சூர் சமுதாய கூடத்தில் அடைதது வைத்தனர்.

மேலும் அவர்களுக்கு தேவையான மதிய உணவுகளை போலீசார் வழங்கிய நிலையில் தற்சமயம் இரவு உணவு வரவில்லை எனக் கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையாளர் ராஜீவ் பிரண்ட்ஸ் அவர்களை சமாதானப்படுத்தி இன்னும் சிறிது நேரத்தில் உணவு வழங்கப்படும் எனக் கூறி அமர வைத்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மதுரை பழனி நத்தம் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

சுமார் 200 மேற்பட்டவர்கள் சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் மாலை 7 மணி அளவில் போலீசார் அவர்களை விடுவித்த போதிலும் அவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் சங்கத் தலைவர்கள் கூறும் வரை போராட்டம் தொடரும் என சமுதாய நலக்கூடத்திலேயே அமர்ந்துள்ளனர்.

மேலும் சமுதாய நலக்கூடம் என்பதால் போதிய கழிவறை வசதிகள் குறைவாகவே உள்ளது அதுமட்டுமின்றி தரையில் படுத்து உறங்கி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு கழிவறைகள் வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருங்களத்தூர் மண்ணிவாக்கம் தாம்பரம் பகுதியைச் சார்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊருக்கு செல்ல அறிவுறுத்திய பின்பும் செல்லாமல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சமுதாய நலக்கூடத்தின் வழியில் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.