பிரதமர் வருகையால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் – தபெதிக பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் பேட்டி..,
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கு. இராமகிருட்டிணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றோம். தேர்தல் பத்திரத்தில் பாஜக பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்தால் கருப்பு பணம் ஒழிப்போம் என்று கூறிய பாஜக தற்போது வரை ஒழிக்காமல் தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக நூதனமாக ஊழல் செய்துள்ளது.
ஐந்து மக்களவை தொகுதியில் கொண்ட மாநிலங்களில் ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடத்தும் பாஜக, தமிழகத்தில் 40 தொகுதி இருக்கும் பட்சத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துகிறது.பாஜக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்காழிந்துள்ள தமது கோவை அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. கோவையில் பிரதமர் மோடி வருகையால் பொதுமக்கள் மிக அளவில் சிரமம் ஏற்படும். பொது தேர்வு நடக்கும் சமயத்தில் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மோடி தெரு, தெருவாகவோ வீடு, வீடாக பிரச்சாரம் செய்தாலும் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிவித்தார்.