• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை காணொளி வாயிலாக திறந்து வைத்த பிரதமர்..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 1, 2026

காரைக்காலில் உள்ள மத்திய அரசின் என்.ஐ.டி கல்லூரியில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புயல் உள்ளிட்ட மிகப்பெரிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட கல்லூரி கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதியை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் என்.ஐ.டி கல்லூரியில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கல்வி வளாகம் மற்றும் தங்கும் விடுதி கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று புதுச்சேரியில் 2700 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள என்.ஐ.டி கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட 130 கோடி மதிப்பிலான கல்வி வளாகம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிணை காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த என்.ஐ.டி கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கல்வி வளாகம் மற்றும் தங்கும் விடுதிகள் புயல்உள்ளிட்ட மிகப்பெரிய பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.