• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!

Byவிஷா

Mar 30, 2023

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது சாமானியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சாமானியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், 800 வகை மருந்துகளின் விலை 12.12 சதவீதம் உயரும் என்று என்பிபிஏ தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் காய்ச்சல், பிபி, சர்க்கரை நோய், இதய நோய், தோல் நோய்கள், தொற்று, ரத்தசோகை போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகள், ஆன்டிபயாடிக் மருந்துகள், இதயநோய்க்கான மருந்துகளின் விலையும் உயரும். இதேவேளை, மருந்துகளின் விலைகள் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கிடைக்கும் ஏறக்குறைய 6,000 ஃபார்முலேஷன்களில், கிட்டத்தட்ட 18 சதவீதம் திட்டமிடப்பட்ட மருந்துகளின் சில்லறை விலை என்பிபிஏ-ஆல் நிர்ணயிக்கப்படுகிறது.