• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன… மீரா மிதுனை வச்சி செய்யும் காவல்துறை!

நடிகை மீராமிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை  வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவருக்கு கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், கடந்த 14 ம் தேதி  தமிழக போலீஸ் கைது செய்யப்பட்டனர். பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீரா மிதுனை ஜோ மைக்கல் கொடுத்த வழக்கு தொடர்பாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்த போதும், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் மீரா மிதுனின் காவலை செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது.

இதனிடையே கடந்த 2019ம் ஆண்டு நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் மீரா மிதுன் மீது 30 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் உள்ள வழக்கு தொடர்பாக இன்று மீரா மிதுனை சட்டப்படி போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து புழல் சிறையில் இருக்கும் நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார். மொத்தமாக இதுவரை நடிகை மீரா மிதுன் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.