• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஆயுதத்துடன் இளைஞர்களை கைது செய்த போலீசார்.., காவல் துணை ஆணையர் சண்முகம் பேட்டி…

BySeenu

Nov 16, 2023

கோவையில் சமீபத்திய காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது,

குறிப்பாக இருபது வயதுக்கு குறைவான இளைஞர்களே அதிகமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்,    இதனை தட்டி கேட்டுக்கும் நபர்களை ஆயுதம் கொண்டு கடுமையாக தாக்கி விட்டு தப்பி விடுகின்றனர், இதனால் பொதுமக்கள் காவல் நிலையத்தில் அச்சம் புகார் கூற அடைவதாக கூறப்படுகிறது, 

இந்த நிலையில் நேற்று மாலையில் கோவை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீளமேடு காவல் நிலைய சரகத்தின் கீழ் உள்ள தொட்டிபாளையம் பிரிவு அண்ணா நகர் அத்திக்குட்டை பிரிவில் வசித்து வரும் மூர்த்தி மகன் பாஸ்கர் (வயது 24) ,பீளமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் மாலை 6.30 மணியளவில் ஜூஸ் குடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சின்னியம்பாளையம் பள்ளி அருகே வந்த போது தன்னிடம் ஒரு நபர் லிப்ட் கேட்டார் அவரை ஏற்றிக்கொண்டு சின்னியம்பாளையம் சுடுகாட்டு பக்கம், அந்த நபரை இறக்கி விடும் போது ,அங்கு மறைந்து இருந்த 5க்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து லிப்ட் கேட்ட நபரும் சேர்ந்து பாஸ்கரை கட்டையால் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி பாஸ்கரனிடம்  இருந்த ஒரு கிராம் தங்க கடுக்கன் வெள்ளி மோதிரம் பணம் ரூபாய் 5000 த்துடன், செல்போனையும் கூட்டாக கொள்ளையடித்து சென்றதாக புகார் கூறினார், அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரித்த நிலையில், குற்றவாளிகள்  தொடர்ச்சியாக சூலூர் பகுதியில்  இரவு டாக்ஸி டிரைவரான பிரசாந்த்யிடம் வாடகைக்கு வர அழைத்து சென்று வழியில் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 மற்றும் மூன்று செல்போனை பறித்து சென்றாக சூலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு  செய்யப்பட்டது. தொடர்ச்சியாக அதே குற்றவாளிகள்

கோவை இருகூர் ராவத்தூர் பிரிவு முத்து கவுண்டன் புதூர் ரோடு ரயில் பாலம் அருகே வேலை முடித்து சென்ற அகில் மகன் ஹரிக்குமாரை (வ22)  அதிகாலையில்  இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து கத்தியால் தலை,உடம்பில் தாக்கி காயப்படுத்தி இருசக்கர வாகனத்தை பறித்துகொண்டு தப்பி  சென்றதாகவும், ரத்த காயத்துடன்  குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று வந்து சிங்காநல்லூர் காவல் நிலைய புலனாய்வு பிரிவில் புகாரில் வழக்கு  பதிவு செய்து விசாரிக்கையில், 

மூன்று கூட்டுக் கொள்ளை  சம்பவங்களில் ஈடுபட்டது, ஒரே நபர்கள் என்பது புலனாய்வு பிரிவு க்கு என கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை தெற்கு துணை ஆணையர் சண்முகம் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர், ஆய்வாளர்கள் வினோத் குமார் கணேஷ்குமார் தமிழரசு உதவி ஆய்வாளர்கள் தனபால் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்கள் தலைமையில் 5 தனி  படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்ததில், பீளமேடு அவினாசி சாலையில் பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். 

இதில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது எட்டு நபர்கள் என்றும்,அதில் இருவர் தப்பி ஓடி விட்டதாகவும், ஆறு நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு கிராம் தங்க கடுக்கன், வெள்ளி மோதிரம், மூன்று செல் போன், பணம் 5 ஆயிரத்தை கைப்பற்றினர்,

தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, பீளமேடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்கையில் கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய ஜெகன் என்ற நபரே கூட்டத்திற்கு தலைவனாக இருந்து செயல் பட்டது தெரிய வந்த நிலையில் தனிப்படை போலீசார், ஐந்து பிரிவுகளாக பிரிந்து தேடி வருகின்றனர்.

ஆறு நபர்களை பிடித்த தனிப்படை போலீசார், குற்றவாளிகளில், வினு, சோமசுந்தரம், யுவராஜ், மணி, சிவா, தயா, என்று விசாரணை தெரிய வந்துள்ளது, இதில் மணி, யுவராஜ் இரண்டு நபர்கள் 17வயது உடைவர்கள் என்றும் தெரிய வருகிறது,

இந்த சம்பவத்தால் கோவை மாநகர் பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்,