• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கௌரிப்பட்டி கிராம மக்கள் நாய்கள் குளித்தும் அதன் கழிவுகளை கலந்த தண்ணீரை குடிக்கும் அவல நிலை

ByG.Suresh

Jun 28, 2024

சிவகங்கை அருகே சுகாதாரமான தண்ணீர் வழங்க குளத்தைச் சுற்றி முள்வேலி அமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம். ஏராளமான பெண்கள் பங்கேற்பு.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கௌரிப்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது குறித்தும், தகுதியான நபர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கிராம மக்களுக்கு விளக்கி கூறினார்கள். அப்போது பேசிய பெண்கள் கௌரிப்பட்டியில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் இருக்கும் தண்ணீரை அனைவரும் குடிதண்ணீராக பயன்படுத்தும் நிலையில், அங்கு ஆடு, மாடு, நாங்கள் போன்ற கால்நடைகள் நுழைத்து சுகாதாரக் கேடுகளை ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

மேலும் குளத்தைச் சுற்றி முள்வேலி கம்பிகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தீர்மானமாக ஏற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் தெரிவித்தார். அப்போது பேசிய கிராம நிர்வாக அலுவலர் காந்தி, நமது பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டாலோ, விற்பனை செய்யப்பட்டாலோ, கள்ளத்தனமாக மது விற்றாலோ, தகவல் தெரிவிக்கும்படி கிராமப் மக்களிடம் கேட்டுக் கொண்டார். இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை துணிச்சலாக எடுத்துரைத்தனர்.