திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக நிறுத்தப்பட்டது.
திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு 180 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நொடிகளிலேயே தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானி அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து விமானத்தை ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார்.

இதனையடுத்து கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விமானத்திற்குள்ளேயே பயணிகள் காத்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்து கோளாறு சரி செய்யும் பணி தாமதமானதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு பகல் 12 மணிக்கு மாற்று விமானம் மூலம் அவர்கள் அனைவரும் சார்ஜாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




