• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

முகக்கவசம் அணிய மறுத்த பயணி…சர்ரென்று விமானத்தை தரையிரக்கிய விமானி

Byகாயத்ரி

Jan 21, 2022

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 38 என்ற விமானமொன்று மியாமியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டது.புறப்பட்ட சில நிமிடங்களில் மீண்டும் மியாமிக்கே திரும்பியுள்ளது.

காரணம் என்னவாக இருக்குமென்று விசாரித்தபோது அந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.அந்த பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டதால் விமானம் தரையிரக்கப்பட்டது.

விமானம் மீண்டும் மியாமிக்கு திரும்பியவுடன் சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சக பயணி ஒருவர் கூறும்போது, முழுமையான தகவல்கள் எங்களுக்கு சொல்லப் படவில்லை. ஆனால், விமானத்தில் ஒரு பயணி அடாவடியாகவும், தவறுதலாகவும் நடந்து கொண்டார் என்று தெரிவித்தார்.

இந்த எதிர்பாராத சம்பவத்தால் அந்த விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் மாற்று விமானம் மறுநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.