• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மீனை பீர் குடிக்க வைத்த நபர்.., இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவியும் கண்டனங்கள்!

ByKalamegam Viswanathan

Feb 25, 2025

உயிருடன் இருக்கும் பெரிய மீன் ஒன்றை ஒருவர் பீர் குடிக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், அந்த நபரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் PETA ( People for Ethical Treatment of Animals ) அமைப்பை டேக் செய்து நடவடிக்கை எடுக்க கோரி வருகின்றனர்.

மீனை பீர் குடிக்க வைத்து தொந்தரவு செய்த நபர் இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும் பல வீடியோக்கள் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கும். இத்தகைய வீடியோக்கள் இணையத்தில் மிக சீக்கிரமாக வைரலாகிவிடும். இதேபோல அசாத்தியமான நிகழ்வுகள் அடங்கிய வீடியோக்களும் சீக்கிரம் வைரலாகும். இதன் காரணமாக தங்களது வீடியோக்களும் வைரலாக வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் அசாத்திய மற்றும் ஆபத்தான செயல்களை செய்கின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ அந்த வகையில் ஒருவர் உயிருடன் இருக்கும் மீனுக்கு பீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெரிய உயிருள்ள மீனை அவர் கையில் வைத்திருக்கும் நிலையில், மீனுக்கு தண்ணீர் கொடுப்பதை போல அவர் பீர் குடிக்க கொடுக்கிறார். அந்த மீனும் அதை தண்ணீர் என நினைத்து குடிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. Viral Video : எந்த இடத்துலயும் நடக்காததா நடந்துச்சு.. உணவில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து அலட்சியமாக பேசிய ஊழியர்கள்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம்

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். உயிரினங்களை இப்படி கொடுமை செய்வது சட்டப்படி குற்றம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தங்களது வீடியோக்களுக்கு அதிக பார்வைகளை பெற்று தரும் என்பதால் பலர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.