• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு ஊர் மக்கள் பாராட்டு..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

திண்டுக்கல்லை அடுத்த, தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா
சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 15-ந்தேதி இரவு 10 மணிக்கு நடந்தது. மறுநாள் அதிகாலையில் திருவிழா சாட்டுதல் பெற்று வாணவேடிக்கையுடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவைெயாட்டி காப்பு கட்டிக் கொண்டனர். கடந்த 24ம் தேதி மதியம் 1.30மணி அளவில் அம்மன் சொருகுபட்டை விமானத்தில் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
இத் திருவிழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் தலைமையில், டிஎஸ்பிக்கள் உதயகுமார், இம்மானுவேல் ராஜ்குமார், ரவி ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சுமார் 300 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து சீர் செய்யும் பணி, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு ஒரு சிறு அசம்பாவிதம் கூட ஏற்படாமல் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டனர்.
ஒரு மூதாட்டி தவறவிட்ட மணிபர்சை மீட்டு மூதாட்டி இடம் ஒப்படைத்தனர். திருவிழா சீரும் சிறப்பாக நடந்து முடிவதற்கு காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு பணி மற்றும் ஒத்துழைப்பும் ஓர் காரணம் என ஊர் பொதுமக்கள் தங்கள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.செய்தியாளர் வி காளமேகம்