வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனை அடுத்து கடந்த மார்ச் 15ஆம் தேதி மாலை முதல் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

அனுமதி இன்றி வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட வேண்டும் சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதன் காரணமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு முன்பாக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் சுவரொட்டிகள் பேனர்கள் உள்ளிட்டவைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி உள்ளிட்ட நிர்வாகத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதன்படி இன்று சுருளிப்பட்டியில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் முல்லைப் பெரியாற்று பாலத்தில் வரையப்பட்டிருந்த அரசியல் சுவர் விளம்பரங்களை அளிக்கும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் சுருளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் உள்ள சுவரொட்டிகள் கிளிக்கும் பணியிலும் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றும் பணியிலும் முமரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



