• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மாறன் படத்தில் ஒரே பிளஸ்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாறன்.. மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார், சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் நேற்று மாலை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

வெளியானது முதல் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது, மாறன் திரைப்படம். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். துருவங்கள் 16 படத்திற்கு பிறகு கார்த்திக் நரேனின் படங்கள் மோசமான விமர்சனங்களையே பெற்று வருகின்றன!

இந்நிலையில் இந்த படத்தின் ஒரே ஆறுதல் இயக்குனர் அமீர் ஒரு கௌரவ வேடத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுதான்! இது குறித்து படக்குழுவினர் சஸ்பென்ஸாக வைத்திருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த வடசென்னை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.