ஜவுளி மற்றும் நூற்பாலைத்துறையில் முன்னணி நிறுவனமான பிரிமியர் மில்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி, கோவை வரதராஜபுரத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து அதன் ஒரு பள்ளி கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது.
இது குறித்து பிரிமியர் மில்ஸ் குழும இயக்குனர் திருமதி கவிதா சந்திரன் கூறுகையில், தரமான கல்வியின் மூலம் முன்னேற்றத்தினை ஊக்குவிப்பது மற்றும் எதிர்காலத் தலைமுறைனருக்கு அதிகாரமளித்து முன்னேற்றத்தை ஏற்ப்படுத்துவது என்பது பிரிமியர் மில்ஸ் குழும நிறுவனத்தின் நோக்கமாகும் என்றார்.
கட்டிடத்தின் ஒவ்வொரு அம்சமும் பள்ளி ஆலோசகரின் உதவியுடன் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறிய அவர் “கல்வியே உலக மாற்றத்திற்கான மிகச்சிறந்த ஆயுதமாகும்” எனும் நெல்சன் மண்டேலா அவர்களின் பொன் மொழியை சுட்டிக்காட்டினார்.