• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் இன்று துவங்கியது

இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ், மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

‘O2’, ‘தம்மம்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தமிழழகன், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

திரைக்கதை, வசனம் – தமிழ் பிரபா மற்றும் ஜெய்குமார், இயக்கம் – ஜெய்குமார், தயாரிப்பு – லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி, நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித், கலை இயக்கம் – ரகு, படத் தொகுப்பு – செல்வா R.K., உடைகள் – ஏகாம்பரம், புகைப்படங்கள் – ராஜா,

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழகத்தின் நகரங்கள், ஊர்களின் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுப்பூர்வமான ஒரு வாழ்வியலையும், நட்பு, கொண்டாட்டங்களையும் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியான கதையமைப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கிறது. இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.