தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் பரிந்துரையில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் வழித்தோன்றலான இன்றைய இளம் தலைமுறையினர்களை தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்று காண்பிக்கும் திட்டம் முழுவதும் தமிழக அரசின் செலவில் அழைத்து வரும் திட்டத்தில்.
ஆகஸ்ட் திங்கள் 1ம் நாள் தமிழகத்திற்கு, அயலக தமிழ் மாணவர்கள் ஆண்கள் 20_பேர், பெண்கள் 76-பேர்,14 நாடுகளை சேர்ந்தவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்று அவரது வாழ்த்துகளை தெரிவித்தார். கடந்த 1_ம் தேதி வந்த 98_மாணவர்களில்,

பிஜி. 10 ரீயூனியன் 8மார்டினிக். 10 இந்தோனேஷியா 12 தென்னாப்பிரிக்கா 10 மியான்மார். 13 மொரிஷியஸ். 12 மலேஷியா. 10 இலங்கை. 9 ஆஸ்திரேலியா. 1
கனடா. 3 ஜெர்மனி. 2 கன்னியாகுமரிக்கு நேற்று (ஆகஸ்ட்_9) வந்த தமிழகத்தின் அயலக விருந்தினர்களை குமரி மாவட்டம் நிர்விகத்தின் சார்பில் வரவேற்கப்பட்டார்கள்.
கன்னியாகுமரியில் சூரிய உதயம் கடலில் படகு பயணம் மூலம்
உலகத்திருமறை தந்த ஐயன் திருவள்ளுவரின் வான் தொட முயலும் உயர்ந்த சிலை, கண்ணாடிப் பாலம், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மூன்று கடல்கள் சந்திக்கும் குமரி முனை, தேசத்தந்தை அண்ணல் காந்தி, மற்றும் தமிழகத்தில் கல்விக் கண் திறந்த காமராஜர் நினைவுமண்டபங்கள், கடற் கரை ஓரத்தில் காந்தியடிகள், காமராஜர் உரையாடல் போன்ற அற்புதமான சிலை, வட்டக்கோட்டை இவற்றை அயலக தமிழ் விருந்தினர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

கன்னியாகுமரியில் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்ட தமிழக அரசின் விருந்தினர்களை மதிய விருந்து உணவுக்கு முன் மாணவர்கள் மத்தியில் உரையாடிய, குமரி ஆட்சியர் அழகு மீனா.தமிழின் தொன்மை,உலக மொழிகளில் முன்னோடி,2000_ம் ஆண்டுகளை கடந்த பழமையான மூத்த மொழி தமிழ் என்பது பற்றிய உரையாடலில்ன் போது, இங்கே கூடியிருக்கும் உங்கள் குடும்பத்தின் வயதுமிகுந்தவர்ள் என்றோ ஒரு காலத்தில் கன்னியாகுமரி முதல் காஞ்சிபுரம் வரை உள்ள தமிழக பகுதிகளில் இருந்து அயல் நாடுகளுக்கு சென்றவர்கள் என எண்ணும் போது உங்கள் உள்ளம் எல்லாம் சிலிர்ப்பதை என்னால் உணர முடிகிறது.
உங்கள் எல்லோரிடமும் தமிழக மக்களின் சார்பில் ஒற்றை கோரிக்கை. உங்கள் தாத்தா பாட்டி இன்றும் பேசும் தாய் தமிழை நீங்கள் உங்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கு,
வாழையடி வாழையாக எடுத்து செல்ல வேண்டும் என ஆட்சியர் அழகு மீனா
கேட்டுக்கொண்டதுடன் குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.