கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத்) கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமர்வுகளும், குளித்தலை சார்பு நீதிமன்ற வளாகத்தில் 2 அமர்வுகளும், அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் 1 அமர்வும் மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் 1 அமர்வும் என மொத்தம் 9 அமர்வுகளில் நடைபெறுகிறது.

இந்த 9 அமர்வுகளில் மொத்தம் 1531 நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காண எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட நீதிபதி இளவழகன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் சார்பு நீதிபதி அனுராதா செய்திருந்தார்.
