• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரால் பரபரப்பு

குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி க்கு உட்பட்ட அருவிக்கரை ஊராட்சி தேங்காய் விளையில் நடந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார்.
குமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் ஆராய்ச்சி மையம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் தொடர்ந்து.தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.குமரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார் என பேசிக்கொண்டு இருந்த போது.


கிராம சபை கூட்டத்தில் பத்மநாபபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் சீலன் என்பவர் குவரி தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ்யை நோக்கி குவாரி குறித்துஒரு கேள்வி எழுப்பினார் இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.அங்கிருந்த காவல்துறையினர் கேள்வி எழுப்பிய நபர் சீலனை.கூட்டத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் குவாரிகள் பற்றி கேட்டபோது.


குமரி மாவட்டத்தில் 6_குவாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.அமைச்சர் மனேதங்கராஜ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சூழல் குமரி மாவட்டத்தில் பொது மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி குமரி கனிமவள பாதுகாப்பு இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.