பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, அரசுதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து “நிறைந்தது மனம்” என்ற திட்டம் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வ செய்து வருகின்றார்.

அதனடிப்படையில் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து, அரசு திட்டங்கள் உங்கள் பகுதியில் முறையாக செயல்படுத்தப்படுகின்றதா, எந்த திட்டம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என்பது குறித்து ஒவ்வொருவராக கேட்டறிந்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பேசிய சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர், தாயுமானவர் திட்டமும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டமும் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், மாதந்தோறும் வீட்டிற்கே வந்து அரிசி, பருப்பு, மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்குவதால், ரேசன் கடைக்கு சென்று வரிசையில் நின்று பொருட்கள் வாங்கும் சிரமம் தற்போது இல்லை என்றும், அதேபோல மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் வீட்டிற்கே மருத்துவர்கள் செவிலியர்கள் வந்து மருத்துவம் பார்ப்பது மிகவும் சிறப்பான திட்டமாக இருப்பதாகவும், இதுபோன்ற திட்டங்களை வழங்கிவரும் முதலமைச்சருக்கு தனது சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் மூதாட்டி தெரிவித்தார்.

இதுபோன்று அங்கிருந்த பெண்கள் தங்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும், மகளிர் விடியல் பயணம் திட்டமும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தனர். தினந்தோறும் பல்வேறு பணியின் காரணமாக பேருந்து பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் மாதத்திற்கு சுமார் ரூ.800 முதல் ரூ.1000 வரை சேமிப்பதாகவும், தங்கள் குழந்தைகள் கல்லூரி பயின்று வருவதால் அங்கு வழங்கப்படும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களும் தங்களுக்கு மிகவும் பிடித்த திட்டங்களாக இருப்பதாக தெரிவித்தனர்.
பெரம்பலூர மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் 3,92,16,266 மகளிரும், கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் 1,10,323 மகளிரும், மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் 1,62,806 நபர்களும் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு 70 வயதிற்கு மேற்பட்ட முதிவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப்பொருட்கள் வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டத்தின் மூலம் 15,818 நபர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













; ?>)
; ?>)
; ?>)