• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட மாடல்

By

Sep 9, 2021 ,

பிரேசிலியன் மாடலான கிரிஸ் கேலரா, ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரேசிலின் மாடலான 33 வயதான கிரிஸ் கேலரா தனது கடந்த காலங்களில் ஏற்பட்ட உறவு முறிவுகளால் விரக்தி அடைந்து இனி தனியாக வாழலாம் என்ற தீர்மானித்துள்ளார். இதனால் தன்னைத் தாவே திருமணம் செய்யும் முடிவை எடுத்திருக்கிறார்.

கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
‘நான் எப்போதும் என் வாழ்வில் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போது என்னை குறித்து மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதனால் அதைக் கொண்டாட முடிவு செய்தேன். என்னை நானே திருமணம் செய்து கொள்வது அற்புதமாக இருந்தது. ஆனால் எனது முடிவை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். என்னை மற்றவர்களிடம் நிரூபிப்பதில், எந்த அர்த்தமும் இல்லை. நான் அவர்களின் கருத்துகளை பார்ப்பதில்லை’ என்றார், கிரிஸ்.
கடந்த 2020ல் பட்ரிசியா கிறிஸ்டின் என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.