• Fri. Apr 26th, 2024

மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு குறைகள் கேட்டு நடவடிக்கை எடுத்த அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பித்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி பொழிஞ்சியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு (மனுநீதி முகாம்) முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு ரூபாய் 2,45,01270 (இரண்டு கோடியே நாற்பத்தி ஐந்து இலட்சத்து ஆயிரத்து இருநூற்று எழுபது) மதிப்பிலான பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி அரசின் சாதனைகளை விளக்கி உரை நிகழ்த்தினார் சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் .இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உள்ளிட்ட அரசு நிர்வாக அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் மெய்யநாதன், என்னங்கய்யா மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு வரும்போது சர்வர் வேலை செய்யவில்லை என்ற பிரச்சனை பெரும்பான்மையான இடங்களில் உள்ளது. அதை சரி செய்யும் பொருட்டு பணியாளர்கள் வேலைக்கு வந்தாலே அவர்களுடைய பதிவு ஆன்லைனில் ஏறா விட்டாலும், பணித்தள பொறுப்பாளர்கள் கணக்கெடுத்து அவர்களுக்கான வேலையை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம் பேசி உள்ளேன் என்று தெரிவித்தார். இது 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *