மதுரை மாவட்டம் சோழவந்தாில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் சோழவந்தான் வாடிப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் குருவித்துறை மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப்பணிமணையில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர தற்காலிக பணியாளர்கள் ஓட்டுனராகவும் நடத்துனராகவும் அலுவலக பணியிலும், பராமரிப்பாளர்களாகவும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையி்ல் போக்குவரத்து பணிமனையில் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக பெரிய அளவில் பள்ளங்கள் ஏர்போர்ட் குண்டும் புலியமாக இருந்தது.


இதன் காரணமாக பணிமனைக்குள் வரும் பேருந்துகளை நிறுத்தி வைப்பதிலும் இயக்குவதிலும் ஓட்டுநர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக தெரிவித்தனர் இது குறித்து அங்குள்ள பணியாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக பேரூராட்சி செயலாளருமான பால்பாண்டியிடம் முறையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அவர் தனது சொந்த செலவில் பணிமனை முழுவதும் உள்ள பள்ளங்களை லாரி மூலம் மண் கொண்டு வந்து இறக்கி நிரப்பி அதனை சரி செய்தார்.
நீண்ட நாள் பிரச்சினையாக இருந்த மேடு பள்ளங்களை சரி செய்ததையடுத்து அங்குள்ள ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தந்த வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியனை போக்குவரத்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.




