மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் கடந்த 1971க்கு முன்பு வரை “லட்சுமி ” என்ற ஒரு பெண் யானை இருந்தது இதனையடுத்து கடந்த 1971ஆம் ஆண்டில் டாப்சிலிப்பில் இருந்து12 வயது கொண்டஒரு பெண் யானை வாங்கப்பட்டது.

அந்த யானைக்கு “அவ்வை ” என்று பெயர் சூட்டப்பட்டு முறையாகபராமரிக்கப்பட்டது. கடந்த 1971 முதல்2012 ஆண்டு வரை 41 ஆண்டுகள் வரைதினமும்காலையில் சரவண பொய்கைக்கு சென்று ஒரு வெள்ளி குடத்தில்புனித நீர் எடுத்து வருதல், ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீப திருவிழா, தை தெப்பத்திருவிழா பங்குனி பெருவிழாக்களில் கொடியேற்றத்திற்கு முன்னதாக நகர்வீதிகளில் “கொடி பட்டம் ” சுமந்து வருதல், 12 மாதமும் நடைபெறும் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டில் வலம் வருதல், கோவிலுக்குள் வரக்கூடிய பக்தர்களுக்கு தனது தும்பிக்கையால் ஆசி வழங்குதல் என்று முருகப் பெருமானுக்கு யானைஅவ்வை பணி செய்து வந்தது.

மேலும் யானை அவ்வைமவுத் ஆர்கான் வாசித்து பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது. கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அவ்வையிடம் மிகுந்த பாசம் காட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2012 ஆண்டு ஜூலைமாதம் 28 – ந் தேதி மரமணம் அடைந்தது. அன்று அவ்வைக்காகஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள்கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

யானைஅவ்வைக்குமணிமண்டபம் மலைக்கு பின்புறம் உள்ள பசுமடம் சார்ந்த நந்தவனத்தில் யானை அவ்வையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் யானை அவ்வை நினைவாக மணிமண்டபம் கட்டவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர் ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உரிய இடத்தில் மணிமண்டபம் கட்டப்படாத நிலையாக இருந்து வந்தது
இந்த நிலையில் திருப்பரங்குன்றம்மலை க்குபின்புறம் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் நுழை வாயின் உள்புறத்தில் ரூ 49.50 லட்சத்தில் 7.25 அடிநீளமும், 3 அடி அகலமும், 6அடி உயரம் 4 அங்குலம்கொண்ட யானை அவ்வைக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
மேலும் 12 டன் எடைகொண்டஒரே கல்லை செதுக்கி 4டன் குறைக்கப்பட்டு அழகு மிளர 8 டன் எடையில் யானை சிலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லிலான4 தூண்கள் மற்றும் கற்களாலான கட்டமைப்புகளுடன் மேல்புறத்தில் அழகு மிளிரகோபுரத்துடன்
மண மண்டபம் கட்டப்பட்டு தயாராக உள்ளது. .. இந்த மண்டபம்விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













; ?>)
; ?>)
; ?>)