தெருக்கூத்து கலையை முன்னிறுத்தி “மிஸ்டர் கல்சுரல் வோர்ல்ட்” பட்டம் வென்று சென்னை திரும்பிய ஆணழகனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது தாத்தாவின் கலையை முன்னிறுத்தி வெற்றி பெற்றதில் பெருமிதம் அடைவதாக பேட்டி..,
பல்வேறு நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மிஸ்டர் கல்ச்சுரல் வேர்ல்ட் இன்டர்நேஷனல் போட்டி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வின் 6 ஆம் ஆண்டு போட்டி வியட்நாமில் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருவர் என்ற விகிதத்தில் 22 நாடுகளை சேர்ந்த ஆணழகன்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்றுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த மனோஜ் குமார் சேஷன் (29) கலந்து கொண்டு தமிழகத்தை சார்ந்த தெருக்கூத்து கலையை முன்னிறுத்தி வேடம் அணிந்து வெற்றி வாகை சூடினார். இந்தியர் வெல்வது இதுவே முதல்முறை ஆகும். தமிழ்நாடு மாடல் அசோசியேஷன் அண்ட் ஐகானிக் ப்ரொடக்ஷன் சேர்ந்து இந்த போட்டிக்கு மனோஜ்குமாரை தயார்படுத்தி பங்கேற்க வைத்தனர். இதற்கான தேர்வு டி.என்.எம்.ஏ சார்பில் நடைபெற்றது.