கோவையை சேர்ந்த நீர் மேலாண்மை மற்றும் பசுமை அமைப்பான சிறுதுளி, கோவை ரவுண்ட் டேபிள் 9, கோவை லேடீஸ் சர்க்கிள் 1, கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை சிட்டி லேடீஸ் சர்க்கிள் 16 ஆகியவற்றுடன் இணைந்து, பாக்யம் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்டால்வர்ட் பீப்பிள் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனங்களின் ஆதரவுடன் கோவையில் உள்ள கோவைப்புதூர் போலீஸ் ஆட்சேர்ப்பு கிளப்பில் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியது .

இந்த முயற்சியில் குமாரகுரு தொழில்நுட்பக்கல்லூரி , ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலைக்கல்லூரி மற்றும் ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 300 மாணவர்களின் தீவிர பங்கேற்புடன் 1,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இத்திட்டத்தில் டி.செந்தில்குமார், கமாண்டன்ட் டி.எஸ்.பி, ஐ.வி.பீ.என்.பிரிவு – கோவைப்புதூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், சிறுதுளியின் ஆபெக்ஸ் உறுப்பினர்கள் சுஜனி பாலு மற்றும் கிருஷ்ணசாமி, பாக்யம் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் பிரவீன், லேடீஸ் சர்க்கிள் ஏரியா தலைவி மந்தாகினி மற்றும் ரவுண்ட் டேபிள் ஏரியா துணைத் தலைவர் ரோஹித் ஆகியோருடன் ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தை சிறுதுளி அமைப்பு செயல்படுத்தி, ஒருங்கிணைத்து, இனிவரும் காலங்களில் நிர்வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




