• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சில்மிஷம் செய்தவரை துணிச்சலுடன் தட்டிகேட்ட சிங்கப்பெண்!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி! அங்கு ஏப்ரல் 3ம் தேதியன்று மாலையில் பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் அந்த நபரை பெரியார் பேருந்து நிலையத்தின் நடைமேடைகளில் துரத்தி சென்று அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் களிமங்கலத்தைச் சேர்ந்த கணேசன் (வயது 36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து பெரியார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த திடீர் நகர் போலீசார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.