• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறையவுள்ளது. இந்த ஆண்டு ரூ.7,000 கோடி அளவுக்கு வருவாய் பற்றாக்குறை குறையும்

கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க எடுக்கப்படும் தொடர் முயற்சிகள் வருத்தமளிக்கிறது; மாநிலங்களின் உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடும்

உக்ரைன் போர் காரணமாக பொருளாதார மீட்டெடுப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி திமுகவிற்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தையும், தமிழ் சமுதாயம் முதலமைச்சர் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் பறைசாற்றுகிறது

நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது

தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்; திராவிட மாடலின் இலக்கணமாக முதலமைச்சர் திகழ்கிறார்;

கோயில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு

புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படுவதன் மூலம் ரூ.50,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும்; செய்யாறு & கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன மையம் அமைக்கப்படும்

நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மேம்பாட்டிற்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.20,400 கோடி ஒதுக்கீடு

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது

தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் உருவாக்கப்படும்

நீர்வளத் துறைக்கு ரூ.7,338.36 கோடி ஒதுக்கீடு; கடந்தாண்டை காட்டிலும் ரூ.4296.35 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு.

நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது; அரசு நலத்திட்ட பயன்கள் அவர்களை சென்று சேர நடமாடும் தகவல் உதவி மையங்கள் அமைக்கப்படும்

மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு.

இதுவரை 75,765 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; எஞ்சிய இணைப்புகளும் விரைவில் வழங்கப்படும்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடியும்,சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு; துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு; மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து, உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

காவல்துறைக்கு ரூ.10,285 கோடி நிதி ஒதுக்கீடு; ரூ.125 கோடி செலவில் புதிய நூலகங்கள்.