தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் ஊராட்சிமன்ற தலைவியாக இருந்தவர் மாலதி; இவருடைய கணவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதியாகவும இருப்பதோடு உள்ளுர் அமைச்சர், எம்எல்ஏ என ஆளுங்கட்சியின் துணையோடு வலம் வருபவர் இந்நிலையி்ல் குளத்தூர் ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் பெயரில் போலியாக இரசீது ஆவணங்கள் அடித்து புதிய குடிநீர் இணைப்புக்கு தலா ₹5000 வீதம் மற்றும் குடியிருப்பு கட்டுமான வரியினங்களுக்கு என ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் பெயரில் சுமார் ₹50 லட்சத்திற்கும் மேல் அபேஸ் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது,

இது தொடர்பாக குளத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதிய வீட்டு குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை எனக் கூறி 5000 ரசீதுக்கு மேல் போலி ரசீது அச்சடித்து, வரி வசூலிப்பவர் கையொப்பத்தில் தானே கையொப்பம் இட்டு , அனைத்து கிராம பொதுமக்களிடமும் 50 லட்சம் வரை துணிகரமாக கொள்ளையடித்து ஓடிவிட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் மாலதியின் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், குளத்தூர் ஊராட்சியில் புதிய வீட்டு குடிநீர் இணைப்புக்கு என முன்னாள் ஊராட்சி தலைவர் மாலதியிடம் வைப்புத் தொகை செலுத்தியும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்காததால் பொதுமக்கள் வைப்பு தொகை செலுத்திய ரசீதுடன் வீட்டு குடிநீர் இணைப்பு கேட்டு தற்போதைய வட்டார வளர்ச்சி அலுவலரையும் , ஊராட்சி செயலரையும் அணுகிய பொழுது , இது போலி ரசீது எனவும், முன்னாள் ஊராட்சி தலைவர் மாலதியால் வசூலிக்கப்பட்ட வைப்புத் தொகை எனும் தொகை எதுவும் ஊராட்சி வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை. எனவும், நீங்கள் கொடுத்த ரூபாயினை முன்னாள் ஊராட்சித் தலைவர் மாலதியிடமே கேட்டுக்கொள்ளவும் என கூறிவிட்டனர். இதனால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

வைப்புத்தொகை போலி ரசீது மூலம் 50 லட்சம், வீடு கட்டாமல் போலி வீட்டு வரி வழங்கியதில் 50 லட்சம், வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க பைப்லைன் வேலை செய்ததில் 1 கோடி என மொத்தம் 2 கோடிக்கு மேல் ஊழல் செய்ததை தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இந்நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அரசு அலுவலர் அனைவருக்கும் இதில் தொடர்பு இருப்பது ஊர்ஜிதம் ஆகிறது எனவும், இந்த மோசடி விவகாரத்தில் முக்கிய பிரமுகர் ஒருவர் உடந்தையாக இருந்து செயல்பட்டு வந்துள்ளார் எனவும் உரிய ஆதாரத்துடன் கூடிய புகார் மனுக்களுக்கு எவ்வித பதிலும் அளிப்பதில்லை என பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதோடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி தணிக்கைத்துறை அதிகாரிகள் உரிய விசாரணைக்களை மேற்கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.