• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அமேசான் பழங்குடியின மக்களின் கடைசி மனிதன் இறப்பு..

Byகாயத்ரி

Aug 30, 2022

பிரேசிலில் உள்ள அமேசான் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களின் கடைசி மனிதர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். 1970 இல் இருந்து 1995க்குள் நில அபகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த பழங்குடியின மக்கள் பலர் கொல்லப்பட்டு சுமார் 26 வருடங்கள் இந்த நபர் மட்டும் தனியாக காட்டில் வசித்து வந்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு FUNAI அமைப்பிற்கு இவர் உயிருடன் இருப்பதும் தனியாக அந்தக் காட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது. ஆனால் அவருடன் எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாதபடி மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அவரது குடிசைக்கு வெளியே சடலமாக கிடந்துள்ளார். 60 வயது மதிக்கத்தக்க அவரது இறப்பிற்கு எந்த ஒரு தாக்குதலும் காரணம் இல்லை என்றும் இயற்கையாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமேசான் காட்டில் வாழ்ந்து வந்த ஒரு பழங்குடியினம் முழுவதுமாக அழிந்துவிட்டது என்பது வேதனை அளிக்கிறது.