பெருங்கவி கோவால் கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி மண்டபத்தின் முன்.
1992_ ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12_ ம் நாள் முதல் நிகழ்வாக தொடங்கியது.

தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற பரப்புரையை. கன்னியாகுமரி முதல் சென்னை வரை பல மாவட்ட தலைநகர் வழியாக பிரச்சாரம் தொடங்கிய வாகனப் பரப்புரை பயணத்தை மேனாள் தமிழக மேலவையின் உறுப்பினர் சங்கரலிங்கனார் தொடங்கி வைத்தார்..அன்று முதல் கடந்த ஆண்டில் (2025_பெப்ரவரி12)ல் 33_வது தமிழ் பரப்புரை பயணத்தை தொடங்கி சென்னை வரை.பெருங்கவி கோ நடத்திய ஊர்தி பயணம்.
இந்த ஆண்டு தமிழ் பரப்புரையை தொடங்கி, தொடர்ந்து நடத்திய பெருங்கவி கோ சில மாதங்களுக்கு முன் புவி வாழ்விலிருந்து விடைபெற்றார்.

தந்தை மறைந்தாலும், தந்தையின் இலட்சிய தமிழ் பரப்புரை பணியை அதன் உரிய தினமான பெப்ரவரி திங்கள் 12_ம் நாளில் ஐயாவின் தனயன் வ.மு.சே. திருவள்ளுவர் இன்று கன்னியாகுமரி- சென்னை பரப்புரை ஊர்தி பயணத்தை காந்தி நினைவு மண்டபம் முன்பிருந்தே தொடங்கினார்.
பெருங்கவி கோவின் நிழல் படத்திற்கு மலர் மாலை சூடி. தமிழ் சான்றோர்கள் தியாகி முனைவர் முத்துக்கருப்பன், அருட்பணி பணிவன்பன் வின்சென்ட் அடிகளார்,
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் இளங்கோ, தமிழ் குழவி விசுவநாதன் செல்வின் குமார்
பியூலா செல்வின் குமார். கன்னியாகுமரியை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை
மற்றும் தாமஸ் உட்பட 50_க்கும் அதிகமான தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்துதலில்.
வ.மு.சே. திருவள்ளுவர் தந்தை வழியில் 34_வது ஆண்டாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற பரப்புரையை தொடங்கினார்.

இன்று நெல்லை, தூத்துக்குடி நிகழ்வுகளுக்கு பின் கோவில்பெட்டி நிகழ்வுடன் முதல் நாள் நிகழ்வு நிறைவடைந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தமிழ் பரப்புரை ஊர்தி பயணம் எதிர் வரும் பெப்ரவரி திங்கள் 24_ ங்காம் நாள் சென்னையில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பில் வரவேற்புக்கு பின் நிறைவடையும்.










