• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் காட்டு யாணை நெற்பயிரை சேதப்படுத்திய சம்பவம், விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது…

ByP.Thangapandi

Jan 5, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள எம்.கல்லுப்பட்டி அய்யனார்கோவில் அணை அருகில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கீழே இறங்கி வந்த ஒன்றை காட்டு யாணை கடந்த இரு தினங்காளக அடிவார பகுதியில்
இடும்பசாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் இந்த மலை அடிவார பகுதிக்கு யாணைகள் வருவதில்லை என்றும் வழி தவறி இந்த பகுதிக்கு இந்த யாணை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யாணையான இந்த யாணையை சாப்டூர் வனச்சரகத்திற்குட்பட்ட சுமார் 20 க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் மீண்டும் இரவு நேரம் மற்றும் அதிகாலை நேரங்களில் கீழே இறங்கி வருவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் செல்லமணி தெரிவித்துள்ளார்.

தோட்டத்து பகுதிக்குள் வந்துள்ள இந்த ஒன்றை யாணை விவசாயிகளை தாக்கும் முன்பு வனத்துறையினர் யாணையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.