• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கிணற்றில் நீச்சல் பழக சென்ற போது நீரில் மூழ்கி மாமன் மற்றும் மருமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ByP.Thangapandi

Apr 1, 2024

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்ற பாண்டி- யும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் – ம் மாமன் மருமகன்.

பிரேம்குமார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் சூழலில் விடுமுறைக்காக மாமன் ஆனந்த என்ற பாண்டி ஊருக்கு வந்த போது நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமானுத்து கிராமத்தில் உள்ள அன்னக்கொடி என்பவரது தொட்டத்தை ஆனந்த் என்ற பாண்டியின் தந்தை கணேசன் ஒத்திக்கு குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் சூழலில்., இன்று இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் மாமன் ஆனந்த் என்ற பாண்டி, மருமகன் பிரேம்குமாருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது.

கிணற்றில் நீச்சல் பழகி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத் துறை வீரர்கள் மற்றும் போலிசார் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த இருவர் உயிரிழந்தது தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.