• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற தலைவின் கணவர் வார்டு உறுப்பினரை சரமாரி தாக்குதல்…

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழக்கம்போல் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் தலைவர் அஞ்சம்மாள் ஏற்கனவே பார்த்த வேலைகளுக்கு வெளி எடுக்க வேண்டும் எனவே அனைவரும் கையெழுத்து போடுங்கள் என கேட்டதாகவும், அதற்கு 4-வது வார்டு உறுப்பினர் தீர்மானங்களை படித்துக் காட்டுங்கள் அதன்பிறகு கையெழுத்து போகிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு மறுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது வெளிநடப்பு செய்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே கையில் ஆயுதங்களுடன் தயாராக இருந்த அஞ்சம்மாள் கணவர் வருஷம் முத்து உள்ளிட்ட பலர் கையெழுத்து போட மறுத்தால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளர். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆண்டா ஊரணி ஊராட்சி மன்ற தலைவி அஞ்சம்மாள் அவரது கணவர் வருசமுத்து. மகள் சுதா, சுதாவின் கணவர் கார்த்திக் ராஜா, பனிச்சகுடியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் செல்வராஜ், லட்சுமணன் மகன் அருண். யாக்கோப் மகன் சரண் மற்றும் கவ்வூரைச் சேர்ந்த மணி மகன் சூர்யா ஆகியோர்கள் சட்டவிரோதமாக ஒன்றுகூடி தகாத வார்த்தைகளால் திட்டி கொல்லாமல் விடமாட்டேன் அன தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகானந்தம் (பொறுப்பு) வழக்கு பதிவு செய்து ஆண்டாவூரணி பஞ்சாயத்து தலைவர் அஞ்சம்மாள், அவரது கணவர் வருசமுத்து உள்பட உறவினர்கள் தலைமறைவாகிய நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.