• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார் – விருதுநகர் எம்பி மாணிக் தாகூர்

ByM.S.karthik

Apr 22, 2025

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பாஜக தலைவர் போல் ஆளுநர் செயல்படுகிறார் என விருதுநகர் எம்பி மாணிக் தாகூர் கூறியுள்ளார். எம்பிக்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்டு, நிறைவேற்றித் தரக்கூடிய மத்திய அமைச்சர் நிதின் கடற்கரைக்கு நன்றி தெரிவித்து, காங்கிரஸ் எம்பி பாராட்டினார்.

திண்டுக்கல் – விருதுநகர் நான்கு வழிசாலையில் அமைந்துள்ள தனக்கன்குளம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில்அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் ஏராளமான உயிரிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து இப்பகுதிகளில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை நடைபெற்றது. தனக்கன்குளம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பூமி பூஜைகளில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் காங்கிரஸ் எம்பிஎஸ் பழனிக்குமார், உசிலை சிவா, காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் (திமுக)மதன்குமார், விசிக மேற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், சிடிஆர் கன்ஸ்ட்ரக்ஸ்ன்ஸ் விக்னேஷ்&கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக் தாகூர்..,

தனக்கன்குளம், சிவரக்கோட்டை, கள்ளிக்குடி பகுதிகளில் தொடர் விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆறு ஆண்டுகளாக முயற்சி செய்து மத்திய அமைச்சர் நிதின் கடற்கரையிடம் கோரிக்கை வைத்து பாராளுமன்றத்திலும் இது குறித்து பேசி இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து தனக்கன்குளத்தில் 43 கோடியிலும், சிவரக்கோட்டையில் 23 கோடியிலும், கள்ளிக்குடியில் 29 கோடி செலவிலும் மேம்பாலப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்துள்ளோம். எய்ம்ஸ் அமையக்கூடிய இப்பகுதியில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கிய மத்திய அமைச்சர் நிதின் கடற்கரைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மத்திய அமைச்சர்களில் நிதின் கடற்கரை ஒருவர் தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய அமைச்சர் அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக பாஜக கூட்டணி உடுத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பாஜக அதிமுக கூட்டணி என்பது மூன்று முறை தோல்வி அடைந்த கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படக்கூடிய கூட்டணி சிபிஐ, ஐ டி , ஈ டி துணையால் உருவாக்கியிருக்கிறது. இந்த கூட்டணி பயத்தால் உருவான கூட்டணி இந்த கூட்டணி தமிழகத்திற்கு ஆபத்தான கூட்டணி.

உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தி தேர்தலில் வெற்றி பெற்றதை பற்றி தேர்தல் வழக்காக மாற்றி இந்த வழக்கை மீண்டும் ஒருமுறை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நியாயம் வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும்.

உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும் ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறித்து, செய்தியாளர்கள் கேள்விக்கு ஆளுநர் ரவி மீண்டும் ஒருமுறை தவறை செய்கிறார். கவர்னர் மாண்போடு மதிக்கக்கூடிய ஆளுநர் ரவி தரம் தாழ்ந்த செயல்களால் அவர் பாஜகவில் தலைவராக செயல்படுகிறாரா? என்பது போல் தோன்றுகிறது. கவர்னருக்கு ஆதரவாக அமித்ஷா போன்றவர்கள் செயல்படுவது ஜனநாயக படுகொலையாகும்.
கவர்னர் பதவியில் இருப்பவர் தீர்ப்புக்கு பின்பு அப்படி செய்வது நியாயமற்றது. தேவையில்லாமல் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளை கவனத்துடன் இருக்கக்கூடிய அரசனுடைய நிர்வாகத்தை குறைக்கக்கூடிய வகையில் கல்வித்துறையில் தொடர்ந்து மதவாரத்தை புகுத்துகின்ற ஆர்எஸ்எஸ் செயல்பாடுகளையும், சிந்தனைகளையும் ஊக்குவிப்பது போல் ஆளுநருடைய செயல்பாடுகள் உள்ளது.