கோவை மாவட்டம் சிறுமுகை_வெள்ளிகுப்பம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளரிடம் பட்டப் பகலில் அரிவாள் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய்ஆனந்த் (46) இவர் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் விஜய்ஆனந்த் வழக்கம்போல் கலெக்சன் பணம் 10 லட்சத்தை மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்பொழுது ஆலாங்கொம்பு (SSVMபள்ளி)அருகே சென்ற பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் விஜய்ஆனந்தை வழிமறித்து அரிவாள் காட்டி மிரட்டி அவரிடம் உள்ள பணத்தை கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். அப்பகுதியில் அலறல் சத்தம் கேட்டு கூட்டம் அதிகமாகவே அங்கிருந்து அவர்கள் தப்பியோடி விட்டனர்.
பட்டப்பகலில் நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







; ?>)
; ?>)
; ?>)