• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுக நகர் மன்ற தலைவரை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்

நாமக்கல் மாவட்டம், ஆலாம் பாளையத்தில், சொத்து வரி, மின் கட்டணம், பால் விலையை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சரும் தற்போது குமாரபாளையம் எம்.எல்.ஏவுமான தங்கமணி கலந்து கொண்டார்.
இந்த ஆர்பாட்டத்தின்போது தி.மு.க. அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து பத்திரிகையாளர்களுக்கு எம்.எல்.ஏ தங்கமணி பேட்டி அளித்தார். மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.பள்ளிபாளையம் திமுக நகர மன்ற தலைவர் செல்வராஜ்க்கு மக்களை பற்றி கவலையில்லை.அவர் கந்துவட்டி மூலம் தன் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.கந்தவட்டி திருப்பி கட்டாதவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்.அவர் மீது பல வழக்குகள் உள்ளன. விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். தற்போதுள்ள ஆட்சியை மக்கள் வெறுக்கின்றனர். விரைவில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்று கூறினார்.