வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில் (The First School) தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
கோவை தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில், பல்வேறு நாட்டினரின் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தி ஃபர்ஸ்ட் ஸ்கூல் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வசு தெய்வ குடும்பகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பால புவனேஸ்வரி மற்றும் நிர்வாக அறங்காவலர் பால முகுந்தன் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளி முதல்வர் ஹேமலதா வரவேற்றார்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மேகாலயா முன்னால் ஆளுனர் சண்முகநாதன் கலந்து கொண்டார். முன்னதாக விழாவில் பள்ளியில் சிறந்து செயல்பட்ட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
தொடர்ந்து இந்தியாவின் பன்முகத்தன்மையை போற்றும் விதமாக பல்வேறு மாநிலங்களின் கலாச்சார நடனங்களை மாணவ,மாணவிகள் நடத்தினர்.
இதே போல உலகின் முக்கிய நாடுகளில் உள்ள வெவ்வேறு கலாச்சார நாடகம், மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் எல்.கே.ஜி.பயிலும் குழந்தைகள் முதலான சிறுவர் சிறுமிகள் பல்வேறு நாட்டினரின் கலாச்சார உடையணிந்து நடனம் ஆடினர். வண்ண ஆடைகள் அணிந்து மாணவ,மாணவிகள் நடத்திய இந்த கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. விழாவில், ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.