• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சூர்யா தயாரிக்கும் முதல் இந்திப்படம் மும்பையில் படப்பிடிப்பு தொடக்கம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் 25.04.2022 அன்று காலை பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.
நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி படம்இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகன் அக்க்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சூரரை போற்று’ இந்தி ரீமேக் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அபுடான்டியா என்டர்டைன்மென்ட் மற்றும் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. ஜோதிகா, சூர்யா ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா அவர்களும் இப்படத்தை தயாரிக்கிறார். சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கை தமிழில் இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இந்தியிலும் இயக்குகிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, இசை ஜீ. வி. பிரகாஷ் குமார்அக்க்ஷய் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராதிகா மதன் நடிக்கிறார். படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.