• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆழியார் அணை பூங்கா செல்ல இன்று முதல் தடை!

தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஆனைமலை அடுத்த ஆழியார் அணை பூங்கா பகுதிக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கியமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்,

இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் ஆழியார் அணை பூங்கா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் ஆலய அணைப்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அத்துமீறும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.