• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிகார பலம்படைத்தவர்களுக்கு எதிரான படம் வீரமே வாகை சூடும்

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் படம் வீரமே வாகை சூடும். இப்படத்தில் விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா , மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் அனைத்து கட்ட பணிகளும் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


படம் பற்றி இயக்குனர் து.பா.சரவணன் கூறியதாவது: பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவமுள்ள திரைக்கதையில் தயாராகிவரும் படம். அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது.வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். என்றார்.