திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை ஒன்றிணைத்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் மதுரை, கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது நேற்றைய நிகழ்வின் தொகுப்பு
நீலம் பண்பாட்டு மையம் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சியை நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது.
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , இயக்குனர் அதியன் ஆதிரை திருமுருகன் காந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செல்வா மற்றும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் ஆகியோர் கலந்துக்கொண்டு மக்களோடு மக்களிசையை கொண்டாடினர். மேலும் இசையமைப்பாளர் சாம் ரோல்டன் அவர்கள் “உலக இசையில் பறையிசை மிக முக்கியமானது மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் எழுச்சிக்கான ஒரு மாபெரும் முயற்சியை எடுத்துள்ளார்” என்று நிகழ்ச்சியை சிறப்பித்து கூறினார் பின்பு பேசிய இயக்குனர் அதியன் ஆதிரை “கிராமப்புற வாழ்வியலை மக்களிசையோடு தொடர்ப்பு படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றது” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தோழர் செல்வா அவர்கள் “உரிமைக்கான முழக்கம் இந்த பண்பாட்டு தளத்தில் ஒலிக்கிறது” என்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் இசைக் கலைஞர்களை பற்றி “நாம் எழுத வேண்டும் என்றும் இம்மக்களிசையை நாம் மிகவும் முக்கியமாக ஆவண படுத்த வேண்டும் என்றும் கூறி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மக்களிசை கலைஞர்களுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் விருது கொடுத்து கௌரவித்தார்.