நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு எனக் கூறும் மீம் வீடியோவை இயக்குநர் ஜான் மகேந்திரன் பகிர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தை இயக்கியவர் ஜான் மகேந்திரன். இவர் ‘முள்ளும் மலரும்’,’ உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேந்திரனின் மகனாவார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மூளை வளர்ச்சி குறைவு என தனது எக்ஸ் பக்கத்தில் மீம் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்
.அந்த வீடியோவில், சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசும் வீடியோ உள்ளது. அந்த வீடியோவைத் தொடர்ந்து ‘நாயகன்’ படத்தில் ஜனகராஜ் பேசும் வசனமான, “இது பொறந்ததுல இருந்தே இப்படித்தானாம்.. மூளை வளர்ச்சி குறைவாம்” எனப் பேசும் காட்சி சேர்க்கப்பட்டுள்ள, மீம் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், ஜான் மகேந்திரனுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.