• Sun. Apr 28th, 2024

தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றும் அனுபவம் புதுமையானது- மனம் திறந்த ஆளுநர்

ByA.Tamilselvan

Jan 22, 2023

தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆளுநராகஆர்.என்.ரவியை நேற்று கிண்டி ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது பேசிய அவர் தமிழ்நாடுஆளுநராக பணியாற்றும் அனுபவம், புதுமையானது என்றார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் அனுபவம் பற்றிய கேள்விக்கு அவர் பதில்அளித்தபோது..30 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி, தற்போது தமிழ்நாடு ஆளுநராக பணியாற்றும் அனுபவம், புதுமையானது. திடீரென மத்தியில் ஆட்சி மாறியதும், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றுமாறு பிரதமர் என்னை கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது அதற்கும் இங்குள்ள மொழி மற்றும் மக்களும் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன். இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷ யங்களை தெரிந்து கொண்டேன். நான் இப்போது தமிழ் மொழியை கற்று வருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாக படிக்க முடிகிறது. இது ஒரு அற்புதமான இடம்.
இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். கலாசாரம் மிகவும் ஆழமானது மற்றும் வளமானது. தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது, ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. தமிழின் செழுமையை நாடு முழுவதும் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் வரலாற்றை எல்லாம் படித்து வருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் இதே முறையில் பின்பற்றப்பட்ட பல ஆயிரம் உடைக்கப்படாத கலாசார மரபுகளைக் கொண்ட இடமாக தமிழ்நாடு உள்ளது. ராமேஸ்வரம், மதுரை மீனாட்சியம்மன் கோவில்கள், தஞ்சை கோவில்கள் போன்ற இடங்களுக்குச் சென்றால் அவற்றின் முன்பு கிரேக்க கட்டிடக்கலை கூட தோற்கும். அந்த இடங்களின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தான வளம் வாய்ந்தது என்பதை இது காட்டுகிறது.என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *